ஜுக்கினி துவையல்
தேவையான பொருட்கள்
ஜுக்கினி -1
உளுத்தம்பருப்பு - 3 தேக்கரண்டி
கடுகு - 1/2 தேக்கரண்டி
பெருங்காயம் - சிறிதளவு
மிளகாய் வற்றல் - 3
புளி - சிறிதளவு
உப்பு - தேவைக்கேற்ப
கொத்துமல்லி - சிறிதளவு
கறிவேப்பிலை - சிறிதளவு

செய்முறை
சிறிது எண்ணெயில் பருப்பு, கடுகு, மிளகாய், பெருங்காயத்தை வறுத்துத் தனியாக வைத்துக்கொள்ளவும். அதே வாணலியில் பொடியாக நறுக்கிய ஜுக்கினியை தண்ணீர் விடாமல் வதக்கிக்கொள்ளவும். சிறிது எண்ணெயில் வதங்கிவிடும். வறுத்த சாமான்கள், புளி, உப்பு, கறிவேப்பிலை, கொத்துமல்லியுடன் வதக்கிய ஜுக்கினியைப் போட்டு அரைக்கவும்.

இந்தத் துவையலைச் சாதத்துடன் பிசைந்தும் சாப்பிடலாம். மோர்சாதம், சப்பாத்தி, தோசை, இட்லியுடன் தொட்டுக் கொள்ளலாம். மிகவும் நன்றாக இருக்கும். அடர்பச்சை நிறக்காய், இலைப்பச்சை நிறமுள்ள ஜுக்கினி இரண்டையும் துவையலுக்கு உபயோகப்படுத்தலாம்.

பார்வதி ராமன்,
கலபாசஸ், கலிஃபோர்னியா

© TamilOnline.com