காரட் பாதாம் பாயசம்
தேவையான பொருட்கள்

தோல் சீவி 1" நீளத்திற்குநறுக்கிய காரட் துண்டங்கள் - 20
சர்க்கரை - 1 கிண்ணம்
பால் - 2 கிண்ணம்
தோல் நீக்கிய பாதாம் பருப்பு - 10
ஏலப்பொடி - சிறிதளவு
முந்திரி பருப்பு - சிறிதளவு

செய்முறை

காரட்டை நன்றாக வேக வைத்துக் கொள்ளவும். இது சற்று ஆறிய பின்னர் பாதாம் பருப்பை மிக்ஸியில் விழுதாக அரைத்துக் கொள்ளவும். இத்துடன் வெந்த காரட்டைப் போட்டு நன்றாக அரைத்துக் கொள்ளவும்.

அடி கனமான ஒரு பாத்திரத்தில் பால் ஊற்றி, மிதமான தீயில் வைத்து நன்றாகக் கொதித்த பின்னர் காரட் பாதாம் கலவையை அதில் சேர்த்து மேலும் சிறிது நேரம் கொதிக்க விடவும். அடிபிடிக்காமல் அடிக்கடி கிளறி விட்டுக்கொள்ளவும். நன்றாகச் சேர்ந்து கொதித்த பின்னர் வறுத்து ஒடித்த முந்திரிப் பருப்பு, ஏலப்பொடி சேர்த்து சூடாகவோ குளிரவைத்தோ அருந்தலாம்.

பொதுவான பின்குறிப்பு: இந்த எல்லா பாயசங்களுக்கு சர்க்கரை அல்லது வெல்லம் போட்டு செய்யலாம். பாதி அளவு சர்க்கரையுடன் பாதி அளவு வெல்லம் போட்டு செய்யலாம்.

தேங்காய்ப் பாலைத் தனித்தோ அல்லது பாலுடன் கலந்தோ செய்யலாம்.

இனிப்பூட்டிய குறுக்கிய பால் வைத்துச் செய்தால் சேர்க்கும் சர்க்கரை அல்லது வெல்லத்தின் அளவை குறைத்துக் கொள்ளவும்.

சரஸ்வதி தியாகராஜன்

© TamilOnline.com