டெக்சஸ்: நாட்யாவின் 'The Flowering Tree'
ஏப்ரல் 15-16, 2016 தேதிகளில் நாட்யா டான்ஸ் தியேட்டரின் 'The Flowering Tree' (மலரும் மரம்) நாட்டிய நாடகம் டெக்சஸில் கீழ்க்கண்ட இடங்களில் மேடையேற உள்ளது:

ஏப்ரல் 15: the Wortham Center, ஹூஸ்டன்
ஏப்ரல் 16: the Fine Arts Center at Lanier High School, ஆஸ்டின்

நாட்யாவின் இந்தப் படைப்பு ஏழை குமுதாவையும் அவளது சகோதரிகளையும் அவர்களது கிராமத்தினர் ஒதுக்குவது குறித்துப் பேசுகிறது. கடவுள் அவர்களுக்குக் கொடுத்த விசேட மந்திரம் குமுதாவை ஒரு மரமாக மாற்றுகிறது. அந்த மரம் அழகும் கொண்ட மலர்களை அளிக்கிறது. சகோதரிகள் அதிலிருந்து தானாக உதிர்ந்த மலர்க்கொத்துக்களை எடுத்து விற்கிறார்கள். எதுவரை குமுதா மரத்தை அங்குள்ளோர் இயற்கைக்குரிய மரியாதையோடு நடத்துகிறார்களோ, அதுவரை அவள் மீண்டும் மனிதவுருக் கொள்ளமாட்டாள். பூவை விரும்பும் கிராமத்தினர் மரத்தை மதிக்கிறார்களா? இயற்கைக்கும் மனித சமூகத்துக்குமான சமநிலையை மீட்கிறார்களா?

பரதநாட்டியம், பின்னணி இசை, கதைகூறல் ஆகியவற்றோடு சிறந்த ஆடையலங்காரம், ஒலி ஒளியமைப்பு இந்த மலரும் மரத்தை எல்லா வயதினருக்கும் ஏற்ற கலைப்படைப்பாக ஆக்கியுள்ளது.

செய்திக்குறிப்பிலிருந்து

© TamilOnline.com