அடைப் பிரதமன்
தேவையான பொருட்கள்

தயார்நிலை அடை - 1 கிண்ணம்
பொடித்த வெல்லம்அல்லது சர்க்கரை - 2 கிண்ணம்
தயார்நிலைத் தேங்காய்ப் பால் - 2 டப்பா
நெய் - 1 மேசைக்கரண்டி
முந்திரி பருப்பு - சிறிதளவு
உலர் திராட்சை - 10

செய்முறை

ஒரு பாத்திரத்தில் தயார் நிலை அடை 1 கிண்ணம் அளவு எடுத்துக் கொண்டு இத்துடன் கொஞ்சம் தண்ணிர் விட்டுக் குக்கரில் நன்கு வேக விடவும்.

அடி கனமான பாத்திரத்தில் சர்க்கரை அல்லது வெல்லம் சேர்த்து, சிறிது தண்ணிர் விட்டு மிதமான தீயில் வைக்கவும். வெல்லம் கரைந்து 5 நிமிடங்கள் கொதித்த பின்னர் குக்கரில் வெந்த அடையைப் போட்டு ஒன்று சேர கெட்டியாக வந்த பின்பு தேங்காய்ப் பாலைச் சேர்த்துக் கலக்கவும். அதில் நெய் சேர்க்கவும்.

இது நுரைத்துப் பொங்கி வரும்போது இறக்கி வறுத்த ஒடித்த முந்திரி பருப்பு, பொரித்த திராட்சைப் பழம் போட்டுக் கலக்கி, ஏலப்பொடி தூவவும்.

பின்குறிப்பு: அரிசியை வைத்துச் செய்யும் இந்த அடை இப்போது இந்தியக் கடைகளில் தயார் நிலையில் கிடைக்கிறது.

சரஸ்வதி தியாகராஜன்

© TamilOnline.com