பகடி ஆட்டம்


பணபலம் படைத்த ஒருவனை எதிர்த்து பெண்ணொருத்தி நடத்தும் போராட்டம்தான் பகடி ஆட்டம். கௌரி நந்தா போராடும் பெண்ணாக நடிக்க, ரகுமான் சைபர் கிரைம் போலீஸ் உயர் அதிகாரியாக நடிக்கிறார். இவர்களுடன் நிழல்கள் ரவி, சுதா, சிசர் மனோகர், கருத்தம்மா ராஜஸ்ரீ, மோனிகா, சஹானா, திவ்யஸ்ரீ உள்ளிட்டோர் நடிக்கின்றனர். நா. முத்துகுமார் பாடல்களை எழுத, கார்த்திக் ராஜா இசையமைக்கிறார். கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் ராம் கே. சந்திரன். "அனைத்து வசதிகளும் உள்ள ஒருவனுக்கும், அன்றாட வாழ்க்கைக்காகப் போராடும் பெண் ஒருத்திக்கும் இடையே நடக்கும் போராட்டமே இப்படத்தின் கதைக்களம். நவீன உலகின் பொருளாதாரம் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சி எப்படி ஒருவனது வாழ்க்கையைப் புரட்டிப் போடுகிறது என்பதுதான் கதையின் முக்கிய அம்சம்" என்கிறார் டைரக்டர்.

அரவிந்த்

© TamilOnline.com