தேவையான பொருட்கள்
கொட்டை நீக்கிய பலாச் சுளைகள் - 15 பொடித்த வெல்லம் - 2 கிண்ணம் தயார்நிலைத் தேங்காய்ப் பால் - 2 டப்பா நெய் - 1 1/2 மேசைக்கரண்டி ஏலப்பொடி - சிறிதளவு புதிதாக உடைத்து, பொடியாக நறுக்கிய தேங்காய்த் துண்டங்கள் - 1 கைப்பிடி
செய்முறை
பலாச் சுளைகளைச் சிறு துண்டங்களாக நறுக்கி, குக்கரில் இரண்டு விசில் வரும் வரையோ அல்லது நுண்ணலை அடுப்பிலோ கொஞ்சம் தண்ணீருடன் நன்கு வேக விடவும். இது ஆறிய பின்னர் இதில் அரை கைப்பிடி அளவு துண்டங்களை எடுத்து வைத்துக்கொண்டு மீதியை மிக்ஸியில் போட்டு நன்றாக அரைத்துக் கொள்ளவும்.
அடி கனமான பாத்திரத்தில் அரை மேசைக்கரண்டி நெய் விட்டு அதை மிதமான தீயில் வைத்து, தேங்காய் துண்டங்களைப் போட்டு இளம் பொன்னிற மாக வறுத்து எடுத்து வைத்துக்கொள்ளவும்.
இதே வாணலியில் மீதி உள்ள ஒரு மேசைக்கரண்டி நெய் விட்டு, சற்றுச் சூடு வந்ததும், வெந்து அரைத்த பலாப்பழ விழுதைப் போட்டு அடி பிடிக்காமல் கிளறவும். இது நன்கு கெட்டியாக சேர்ந்து வந்த பின்னர் தேங்காய்ப் பாலை விட்டு அடி மேலாக நன்கு கிளறி ஒரு கொதி வந்த பின்னர் இறக்கி ஏலப்பொடி, வறுத்த தேங்காய்த் துண்டங்களயும் போட்டுக் கலக்கி விடவும். இதைச் சூடாக குடிக்க அருமையாக இருக்கும்.
பின்குறிப்பு: இது கெட்டியாக இருந்தால் தேவையான அளவு பால் சேர்த்துத் தளர்த்தலாம். இந்த பாயசத்தைச் சக்கைப் பிரதமன் என்றும் சொல்லுவர்.
சரஸ்வதி தியாகராஜன் |