புதியன பெறுதல்
இல்லாத நேரத்தில்
மனைவியாரின் துணிகளை நானும்,
இல்லாத நேரத்தில்
என் துணிகளை மனைவியாரும்,
எப்போதாவது கொண்டுபோய்
டொனேசனில் போட்டுவிடுவதுகூட
சௌகரியமாய்த்தானிருக்கிறது

பழமைபேசி

கொஞ்சியுலவும் நாய்க்குட்டி

கிறிஸ்துமசு பரிசாக
வரவேண்டிய நாய்க்குட்டி
வெள்ளநிவாரண நிதியாக
ஊருக்குப் போய்விட்டதை
ஓடியோடிக் குதித்தாடி
பாட்டியுடன் மனமுவந்து
சொல்லிக்கொண்டிருக்கும்
பாப்பாவின் நிழல் தெரிகிறது
கொஞ்சியுலவும் நாய்க்குட்டியாய்!

பழமைபேசி

© TamilOnline.com