1) 60 முதல் 75 வரை உள்ள பகா எண்களின் கூட்டுத்தொகை என்ன?
2) கீழே உள்ள வரிசையில் விடுபட்ட இடத்தில் வர வேண்டிய எண் எது, ஏன்?
9 8 9 8 7 9 8 7 6 9 8 7 6 5 9 8 7 6 5 4 9 8 7 6 5 4...
3) ஒரு பள்ளியில் இருக்கும் ஐம்பது மாணவர்களில் மகேஷ் முதலிலிருந்து எட்டாவதாகவும், ஹரீஷ் கடைசியில் இருந்து இருபதாவதாகவும் உள்ளனர். மகேஷிற்கும் ஹரீஷிற்கும் இடையே உள்ள மாணவர்களின் எண்ணிக்கை என்ன?
4) 6729, 13458 இரண்டிற்கும் இடையே உள்ள ஒற்றுமை என்ன?
5) ஒரு படகில் 28 பெரியவர்களோ அல்லது 40 குழந்தைகளோ மட்டுமே பயணம் செய்ய முடியும். படகில் தற்போது 10 குழந்தைகள் உள்ளனர் என்றால் இன்னும் எத்தனை பெரியவர்களை படகில் ஏற்றிக் கொள்ள முடியும்?
அரவிந்த்
விடைகள்1) 61 + 67 + 71 + 73 = 272
2) வரிசை 98 987 9876 98765 987654 என்ற அமைப்பில் உள்ளது. ஆகவே அடுத்து வர வேண்டியது 987654 - 3. ஆகவே விடுபட்ட இடத்தில் வர வேண்டிய எண் = 3.
3) மொத்த மாணவர்களின் எண்ணிக்கை = 50;
மகேஷின் இடம் = 8
ஹரீஷின் இடம் = 20
ஃ 50 - 8 - 20 = 22. மகேஷிற்கும் ஹரீஷிற்கும் இடையே உள்ள மாணவர்களின் எண்ணிக்கை = 22.
4) இரண்டு எண்களிலும் 1 முதல் 9 வரை உள்ள எண்கள் பயன்படுத்தப் பட்டுள்ளன. இரண்டாம் எண்ணின் சரி பாதி முதல் எண்ணாகும். 13458 / 2 = 6729.
5) 28 பெரியவர்கள் = 40 குழந்தைகள்.
40 குழந்தைகளுக்கு 28 பெரியவர்கள் சமம் என்றால் 30 குழந்தைகளுக்கு 21 பெரியவர்கள் சமம். 20 குழந்தைகளுக்கு 14 பெரியவர்கள் சமம். பத்து குழந்தைகளுக்கு ஏழு பெரியவர்கள் சமம். படகில் தற்போது பத்து குழந்தைகள் உள்ளனர் என்பதால் மீதி 30 குழந்தைகளுக்குச் சமமான 21 பெரியவர்கள் மட்டும் படகில் ஏறிக்கொள்ள இயலும்.