தேவையான பொருட்கள்
மாம்பழத் துண்டங்கள் (தோல் நீக்கிநறுக்கியது) - 25 சர்க்கரை - 1 கிண்ணம் தயார்நிலைத்(readymade) தேங்காய்ப் பால் - 2 டப்பா நெய் - 1 மேசைக்கரண்டி முந்திரி பருப்பு - சிறதளவு உலர் திராட்சை - 10 ஏலப்பொடி - 1/4 தேக்கரண்டி
செய்முறை
மாம்பழத் துண்டங்களை நுண்ணலை அடுப்பில் சற்று வேகவைத்துக் கொள்ளவும். அடி கனமான பாத்திரத்தில் நெய் விட்டு அதை மிதமான தீயில் வைத்து வெந்த பழதுண்டங்களைப் போட்டு நன்கு புரட்டி, இதனுடன் சர்க்கரை சேர்த்து, கொதிக்கும் அளவுக்குச் சிறிது தண்ணீர் விட்டு நன்கு கொதிக்க விடவும்.
பின்னர் இதனை அடிக்கடி மெதுவாக கீழ் மேலாகக் கிளறிவிடவும். பின்னர் தேங்காய் பாலை விட்டுக் கலக்கவும். இது நுரைத்துப் பொங்கி கொதிக்கு முன்பே இறக்கி ஏலப்பொடி, நெய்யில் வறுத்த முந்திரி, திராட்சை தூவி சூடாகவோ அல்லது குளிர வைத்தோ சாப்பிடலாம்.
பின்குறிப்பு: இதில் சிறிது மிளகுப் பொடி அல்லது சுக்குப் பொடி தூவிச் சாப்பிட அது புது விதமான சுவையுடன் இருக்கும்.
பதப்படுத்தப்பட்ட பழத்தை வைத்துச் செய்தால் சர்க்கரையைத் தேவைக்கேற்ப குறைக்கவும். பதப்படுத்தப்பட்ட அல்·போன்ஸா மாம்பழம் வைத்து செய்தால் நன்றாக இருக்கும்
சரஸ்வதி தியாகராஜன் |