தேவையான பொருட்கள் புளித்த தயிர் - 1/2 கிண்ணம் காலிஃப்ளவர் (சுமாரான அளவில்) - 1 உருளைக்கிழங்கு (பெரியது) - 2 பச்சைப்பட்டாணி - 1 கிண்ணம் உப்பு - தேவைக்கேற்ப நெய் - 1 மேசைக்கரண்டி சர்க்கரை - 1 தேக்கரண்டி
அரைக்க எண்ணெய் - தேவைக்கேற்ப பச்சை மிளகாய் - 8 மஞ்சள்தூள் - 1/2 தேக்கரண்டி கரம்மசாலா பொடி - 1 தேக்கரண்டி கடுகு - 1 தேக்கரண்டி
செய்முறை கறிகாய்களைக் கழுவி, காலிஃப்ளவரையும் உருளைக்கிழங்கையும் சிறுசிறு துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும். எண்ணெயைச் சூடாக்கி கறிகாயை வதக்கிக் கொள்ளவும். (பட்டாணியைத் தவிர) அரைத்து வைத்தவற்றையும் சேர்த்து வதக்கவும். கறிகாய்கள் அமிழும்வரை நீர் சேர்க்கவும். உப்பு, பட்டாணி ஆகியவற்றைச் சேர்த்து வேகவைக்கவும். நன்றாகக் கலக்கிய தயிர், சர்க்கரை ஆகியவற்றைச் சேர்த்துக் கொதிக்கவைத்து இறக்கியபின் நெய் சேர்க்கவும்.
இதுவொரு பெங்காலி டிஷ். சப்பாத்திக்குத் தொட்டுக்கொள்ளலாம். சுவையாக இருக்கும்.
வசந்தா வீரராகவன், சான் ஹோஸே, கலிஃபோர்னியா |