தேவையான பொருட்கள்
கெட்டியான பால் - 2 கிண்ணம் ஆரஞ்சு எஸன்ஸ் - 1/2 தேக்கரண்டி ஆரஞ்சுப் பழம் - 1 சர்க்கரை - 1 கிண்ணம்
செய்முறை
ஆரஞ்சுச் சுளைகளை எடுத்து, மெல்லிய தோலையும் நீக்கி ஆரஞ்சு முத்துக்களை எடுத்துத் தனியாக வைத்துக் கொள்ளவும்.
பாலையும் சர்க்கரையையும் ஒன்றாகச் சேர்த்து அடி கனமான பாத்திரத்தில் போட்டு மிதமான தீயில் நன்றாகக் கொதிக்க விடவும். அடுப்பிலிருந்து இறக்கி நன்கு ஆறிய பின்னர், ஆரஞ்சு முத்துகளைப் போட்டு மெதுவாகக் கலந்து விடவும். பின்னர் ஆரஞ்சு எஸன்ஸ் சேர்த்துக் கலக்கிக் குளிர் சாதனப்பெட்டியில் வைத்து குளிர்ந்தபின் சாப்பிட்டால் மிகச் சுவையாக இருக்கும்.
பின்குறிப்பு: இனிப்பூட்டிக் குறுக்கிய சேர்த்துச் செய்தால் சர்க்கரை சேர்க்கவேண்டாம்.
சரஸ்வதி தியாகராஜன் |