மார்ச் 26, 2016 அன்று மாலை 4:00 மணிமுதல் 7:00 மணிவரை மறக்கருணையின் இனிமை (தீவிர இரக்க குணத்தின் இனிமை) என்ற கருத்தை விளக்கும் 'மாதுர்ய சௌர்யம்' என்ற தலைப்பிலான
பரதநாட்டிய நிகழ்ச்சி கலிஃபோர்னியாவில் உள்ள சன்னிவேல் கம்யூனிட்டி சென்டர் தியேட்டரில் நடக்கவுள்ளது. கலிஃபோர்னியா, சான் ஹோசே நகரிலுள்ள நிருத்யநிவேதன் கலைப்பள்ளியின் முதன்மை மாணவியும்,
அதன் கலை இயக்குநர் புவனா வெங்கடேஷின் மூத்த புதல்வியுமான ஹர்ஷிதா வெங்கடேஷ் இதில் நடனம் ஆடவிருக்கிறார்.
இந்நிகழ்வு மைத்ரி என்னும் லாபநோக்கமற்ற அமைப்பிற்கு உதவுவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. குடும்பத்தில் வன்முறையால்
பாதிக்கப்பட்டோருக்கு உதவும் பணியை மைத்ரி சிறப்பாகச் செய்துவருகிறது.
கருணையே உருவான கண்ணபிரானையும், அநியாயத்தை அழிக்கும் ஆற்றலான சக்தியையும் மையக்கருவாகக் கொண்டது 'மாதுர்ய சௌர்யம்'. இதில் நேரடி இசைக்குழுவின் பங்களிப்பு உண்டு. பரதக்கலையை
அனுபவிக்கவும் 'மைத்ரி'க்கு உதவவும் இது நல்லதொரு வாய்ப்பு.
நுழைவுச்சீட்டுக்கு: www.nrithyanivedhan.com பரதக்கலைஞரின் வலைமனை: www.harshithav.com மின்னஞ்சல்: lalithkala_sj@yahoo.com
ஹேமா செந்தில்குமார், சான் ஹோசே, கலிஃபோர்னியா |