ஹூஸ்டன்: 'தர்ம யுத்தம்' நாடகம்
மார்ச் 26. 2016 அன்று ஹூஸ்டன் மீனாட்சி தியேட்டர்ஸ் தனது 32ஆவது படைப்பான 'தர்ம யுத்தம்' என்ற தமிழ் நாடகத்தை ஹூஸ்டன் JCC கலையரங்கில் அரங்கேற்ற உள்ளது.

ஹூஸ்டன் சந்திரமௌலி அவர்களின் கதை, வசனத்தில் 'Art of War' கோட்பாடுகளை அடிப்படையாக வைத்து, தற்கால நிகழ்வுகளை இணைத்து, சிரிக்கவும் சிந்திக்கவும் வைப்பதாக இந்த நாடகம் தயாராகி

உள்ளது. Dr. K. சாரநாதனின் இயக்கத்தில், தரமான ஒலி, ஒளி அமைப்பில் அரங்கேறவுள்ளது தர்ம யுத்தம்.

இந்த நாடகத்தைப் பிற அமெரிக்க நகரங்களில் மீனாட்சி தியேட்டர்ஸார் மூலம் மேடையேற்ற விரும்புவோர் தொடர்புகொள்ள:

கோவிந்தன்: gokal98@hotmail.com
Dr. K. சாரநாதன் - kasturisaranathan@gmail.com

விஷி ராமன்,
ஹூஸ்டன், டெக்சஸ்

© TamilOnline.com