பயம் ஒரு பயணம்


டாக்டர் பரத், விசாகா சிங், மீனாட்சி தீட்சித், ஊர்வசி, ஜான் விஜய், 'லொள்ளு சபா' மனோகர், சிங்கம்புலி, யோகி பாபு உள்ளிட்டோர் நடிக்கும் படம் பயம் ஒரு பயணம். ஒய்.ஆர். பிரசாத் இசையமைக்க, மணிஷர்மா கதை எழுதி இயக்குகிறார். "இது மற்ற பேய்ப் படங்களில் இருந்து நிச்சயம் மாறுபட்டதாக இருக்கும். பேய்ப்படம் என்ற பெயரில் நகைச்சுவை அல்லது சென்டிமென்ட் படமாக இருக்கும். ஆனால் இந்தப் படம் முழுக்க, முழுக்க பயத்தையே பிரதானமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது" என்கிறார். கொஞ்சம் பயமாத்தான் இருக்கு!

அரவிந்த்

© TamilOnline.com