ஆறாம் அறிவு


'ஆறாம் அறிவு' என்ற படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி நடிப்பதுடன் தயாரித்து இயக்கவும் செய்கிறார் டாக்டர் பரத் விஜய். நாயகியாக சஹானா அறிமுகமாகிறார். உடன் ஆர்.சி. சுந்தர், சுரேகா, தீபன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். பாடல்களை அம்புரோஸ் எழுத, இசையமைக்கிறார் ஷியாம் எல். ராஜ். பெற்றோர்களின் எதிர்ப்பை மீறி நண்பர்களின் உதவியுடன் வாழ்க்கையில் ஒன்று சேர்கிறார்கள் காதலர்கள். அவர்களது குடும்ப நண்பர் ஒருவர் இறந்து போகிறார். அதன் பின்பு அந்த மனைவியின் நடவடிக்கைகளில் மாற்றம் ஏற்படுகிறது. அது என்ன மாற்றம்? அதனால் அவர்களுக்கு என்ன விளைவு என்பதை சஸ்பென்ஸ் + திகில் கலந்து சொல்ல வருகிறது 'ஆறாம் அறிவு'.

அரவிந்த்

© TamilOnline.com