உனக்குள் நான்


ஓர் ஐந்து வயதுச் சிறுவனின் எண்ணங்களையும், ஏக்கங்களையும் மையமாக வைத்து உருவானது 'உனக்குள் நான்'. சிறுவன் சஞ்சித்முக்கிய வேடத்தில் நடிக்க, கார்த்திக், நாகராஜன், அப்பாராவ், பக்கிரிசாமி ஆகியோர் உடன் நடிக்கின்றனர். கதை, திரைக்கதை, வசனம் எழுதி வெங்கடேஷ்குமார் இயக்குகிறார். "ஒன்றாம் வகுப்பு படிக்கும் சிறுவன் தியேட்டருக்கு படம் பார்க்கச் செல்கிறான். அவனது தந்தை அங்கே ஆபரேட்டராக வேலை பார்க்கிறார். படம் ஓடிக்கொண்டிருக்கும் போது அதில் வரும் கதாபாத்திரங்களோடு தானும் இணைந்து பயணிப்பதாகத் திரைக்கதை உருவாக்கப்பட்டு உள்ளது." என்கிறார் இயக்குனர். விவேக் வேல்முருகன், மல்லிகா பாடல்களை எழுத, டோனி பிரிட்டோ இசையமைக்கிறார். ஒரு குழந்தைக்குத் தாயன்பு எவ்வளவு முக்கியமானது என்பதைப் படம் பேசுகிறது என்று கிசுகிசுக்கிறார் கோலிவுட்டார்.

அரவிந்த்

© TamilOnline.com