சும்மாவே ஆடுவோம்


நடிகரும் இயக்குநருமான காதல் சுகுமார் இயக்கும் அடுத்த படம் 'சும்மாவே ஆடுவோம்'. கிராமத்துக் கூத்துக் கலைஞர்களின் வாழ்க்கையை இதில் நகைச்சுவையோடு காட்சிப்படுத்தியுள்ளனர். நாயகனாக அருண் பாலாஜி, நாயகியாக லீமா பாபு நடிக்கின்றனர். இவர்களுடன் அர்ஜுன், பாலாசிங், பாண்டு, ராபர்ட், யுவராணி, கொட்டாச்சி, போண்டா மணி, உதயா, மனோ என 45க்கும் மேற்பட்ட நகைச்சுவைக் கலைஞர்கள் நடிக்கின்றனர். முருகன் மந்திரம், அஸ்மின் ஆகியோர் பாடல்கள் எழுத, ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்துள்ளார். "கூத்துக்கலை ஒரு காலத்தில் பிரபலமாக இருந்தாலும் தற்போது நலிவடைந்துள்ளது. அந்தக் கலைஞர்களின் தற்போதைய நிலையை இப்படத்தில் சொல்லியிருக்கிறோம். ஆனால் ஒரு டாக்குமெண்டரி போல அல்லாமல், சிரிக்கச் சிரிக்கச் சொல்லியிருக்கிறேன்" என்கிறார் சுகுமார். சும்மா அடிச்சு ஆடுங்க!

அரவிந்த்

© TamilOnline.com