எமன்


'பிச்சைக்காரன்' படத்தைத் தொடர்ந்து விஜய் ஆண்டனி நாயகனாக நடிக்கும் படம் 'எமன்.' நாயகியாக மியா ஜார்ஜ் நடிக்கிறார். 'நான்' படத்தை இயக்கிய ஜீவா சங்கர் இதையும் இயக்குகிறார். நாயகனாக நடிப்பதுடன் இசையும் அமைக்கிறார் விஜய் ஆண்டனி. கதை எழுதி ஒளிப்பதிவு செய்து இயக்குகிறார் ஜீவா சங்கர். "எமன் தலைப்பு கதைக்கு பொருத்தமாக இருக்கும். நாம் பொதுவாக எண்ணுவதைப் போல் அவர் மரணத்துக்கு மட்டுமே கடவுள் அல்ல. அவர் தர்மத்தைக் காக்கும் கடவுளும் ஆவார். இந்தப் படத்தின் கதைக்கரு வரும் நாட்களில் பேசப்படும். எமன் முற்றிலும் ஜனரஞ்சகமான எல்லாரும் ரசிக்கக்கூடிய படமாக இருக்கும்" என்கிறார் ஜீவா சங்கர். இப்படத்திற்காக உடல் எடையை அதிகரித்து, முறுக்கு மீசையுடனும், தாடியுடனும் நடிக்கப் போகிறார் விஜய் ஆண்டனி. எமன்டா....

அரவிந்த்

© TamilOnline.com