கணிதப் புதிர்கள்
1. ஒரு சதுர வேலியை அமைக்க ஒவ்வொரு பக்கத்திற்கும் 21 தூண்கள் தேவைப்படுகின்றன. நான்கு தொடர் சதுர வேலிகளை அமைக்க மொத்தம் எத்தனை தூண்கள் தேவைப்படும்?

2. A, B, C என்ற மூன்று நபர்களது வயதின் பெருக்குத் தொகை 144. அவர்களில் Cயின் வயது ஆறு வருடம் முன்பு ஆறு வயதாக இருந்தது. Aயின் வயதை விட Bயின் வயது நான்கு அதிகம் என்றால் அவர்கள் ஒவ்வொருவரின் தற்போதைய வயது என்ன?

3.
ஒரு நிகழ்ச்சியின் போது நடந்த விருந்தில், விருந்தினர்களில் இருவரில் ஒருவர், ஆப்பிள் பானத்தைப் பருகினர். மூவரில் ஒருவர் ஆரஞ்சு பானத்தைப் பருகினர். நான்கில் ஒருவர் மாம்பழ பானத்தை விரும்பினர். மொத்தம் 130 பானங்கள் அந்த விருந்தில் பரிமாறப்பட்டன என்றால் விருந்தில் கலந்து கொண்ட விருந்தினர்களின் எண்ணிக்கை என்ன?

4. 0, 1, 1, 2, 3, 5, 8...? இந்த வரிசையில் அடுத்து வர வேண்டிய எண் எது, ஏன்?

5. ரமேஷ் போட்டித் தேர்வு ஒன்று எழுதினான். அதில் மொத்தம் 100 கேள்விகள் இருந்தன. அவன் எல்லா கேள்விகளுக்கும் விடையளித்தான். ஒவ்வொரு சரியான விடைக்கும் ஒரு மதிப்பெண் தரப்பட்டது. ஆனால், ஒவ்வொரு தவறான விடைக்கும் மூன்று மதிப்பெண்கள் கழிக்கப்பட்டன. ரமேஷ் மொத்தம் 80 மதிப்பெண்கள் பெற்றிருந்தான் என்றால் அவன் எத்தனை கேள்விகளுக்கு சரியான விடையளித்திருப்பான்?

அரவிந்த்

விடைகள்

© TamilOnline.com