வாழைத்தண்டுப் பச்சடி
தேவையான பொருட்கள்
வாழைத்தண்டு - 1/4 அடித் துண்டு
பூண்டு - 2 பல் (விருப்பமானால்)
இஞ்சி - 1 துண்டு
பச்சைமிளகாய் - 10
தயிர் - 1/4 லிட்டர்
தேங்காய் - 1/4 மூடி
சின்ன வெங்காயம் - 8
சீரகம் - 2 தேக்கரண்டி
கொத்துமல்லி - சிறிதளவு
கறிவேப்பிலை - சிறிதளவு

செய்முறை
வாழைத்தண்டை நார் எடுத்துப் பொடியாக நறுக்கி ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதில் போட்டுக் கொள்ளவும். 1/4 லிட்டர் தயிரில் சுத்தம் செய்த வாழைத்தண்டை 15 நிமிடம் ஊற வைக்கவும். கொத்துமல்லி, வெங்காயம், பச்சைமிளகாய் (விரும்பினால், பூண்டு) கறிவேப்பிலை, தேங்காய் இவற்றை ஒன்றாகப் போட்டு சட்னிப் பதத்தில் அரைத்தெடுத்து, வாழைத்தண்டு ஊற வைத்துள்ள தயிரில் போட்டுக் கலக்கிவிடவும். பின்பு சிறிய வெங்காயத்தை நறுக்கித் தாளித்து தயிரில் சேர்த்துக் கலக்கவும். தேவைக்கேற்ப உப்பு சேர்க்கவும். இதைக் கூட்டாக வைத்துக் கொள்ளலாம். சாப்பாட்டுடன் கலந்து சாப்பிடலாம். பூரி, சப்பாத்திக்கும் தொட்டுக் கொள்ளலாம்.

வசந்தா வீரராகவன்,
சான் ஹோஸே, கலிஃபோர்னியா

© TamilOnline.com