டொபீகா (கேன்சஸ்): பொங்கல் விழா
ஜனவரி, 16, 2016 அன்று கேன்சஸ் மாநிலத்தில் உள்ள டொபீகா நகரில் டொபீகா தமிழ்ச் சங்கம் பொங்கல் விழாவைச் சிறப்பாகக் கொண்டாடியது. விழாமேடை பொங்கல் பாரம்பரியத்தைப் பறைசாற்றும் ஓவியங்களால் அலங்கரிக்கபட்டிருந்தது. விழாவில் சொற்பொழிவுகள், திருக்குறள் ஒப்பித்தல், பாடல், நடன நிகழ்ச்சிகள் மற்றும் சிலம்பாட்டம் ஆகியவை இடம்பெற்றிருந்தன. பொங்கலோடுகூடிய விருந்து பரிமாறப்பட்டது. விழாவை டொபீகா தமிழ்ச் சங்கத் தன்னார்வலர்கள் மற்றும் ஒருங்கிணைப்பாளர்கள் சிறப்பாகச் செய்திருந்தனர்.

முகநூலில் பார்க்க: www.facebook.com/TopekaTamils

மௌலீஸ்வரன் சுவாமிநாதன்,
டொபீகா, கேன்சஸ்

© TamilOnline.com