சிகாகோ: வறியோர்க்கு உணவு
ஜனவரி 17, 2016 அன்று நண்பகல் 12:00 மணிக்கு அமெரிக்கத் தமிழ்ப்பள்ளிகள், உலகத் தமிழ்மொழி அறக்கட்டளை, இடைமேற்கு மாநிலத் தமிழ்ச்சங்கம் ஆகிய மூன்று அமைப்புகளும் இணைந்து இவ்வாண்டின் முதலாவது 'வறியோர்க்கு உணவு' நிகழ்வை Hesed House (659 S. River Road, Aurora, IL : 60506) இல்லத்தில் நடத்தின. திருக்குறளின் நான்கு அதிகாரங்களுக்கு விளக்கமும், பொங்கல் விழாவின் நான்கு நாட்களின் பெருமைகூறும் விவரமும், தமிழ் மண்ணின் பெருமை கூறிச் சென்ற பழம்பெரும் வெளிநாட்டறிஞர்கள் சிறப்புரைகள் அடங்கிய சிறு தொகுப்பும் அளிக்கப்பட்டன.

சிகாகோ பகுதி தமிழ்ப்பள்ளி மாணக்கர்கள் இராகுல், ஸ்ரீசரண், ஸ்ரீவத்சன், சுருத்தி, சுருதி மற்றும் பிரின்டெட்டு ஆகியோரோடு அவர்தம் பெற்றோர் நித்யா, மஞ்சுளா, கீதா, பரத்குமார், ஸ்ரீதரன், சுந்தர், சாக்ரடீசு மற்றும் பாபு இவ்வுணவு வழங்கலுக்குத் துணைநின்றனர். இல்லத்தின் திரு. தாட்டு அவர்கட்கு நன்றிகூறி அனைவரும் விடைபெற்றனர்.

வ.ச. பாபு,
சிகாகோ

© TamilOnline.com