சான் டியாகோ தமிழ்ப்பள்ளி: பொங்கல் விழா
ஜனவரி 18, 2016 அன்று சான் டியாகோ தமிழ்ப்பள்ளி பொங்கல் விழாவை கார்மெல் மவுன்ட்டைன் ரான்ச் பூங்காவில் கொண்டாடியது. மாணவர்களும், பெற்றோர்களும், ஆசிரியர்களும் புத்தாடைகளில்வந்து மகிழ்ச்சியுடன் பங்கேற்றனர். பூங்காவின் நடைபாதைகள் கோலத்தினால் அலங்கரிக்கப்பட்டிருந்தன. பூங்காவில் நான்கு பொங்கல் பானைகளை அடுப்பிலேற்றிபானை பொங்கிய போது "பொங்கலோ பொங்கல்" என ஆரவாரித்தனர்.

மாணவர்களுக்காக விளையாட்டுப்போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் அளிக்கப்பட்டன. பின்னர் உழவர் திருநாள் பற்றியும், கொண்டாடும் முறைகள் மற்றும் அவசியம் பற்றியும் மாணவர்களுக்கு விளக்கப்பட்டது. பொங்கல் விருந்துக்குப் பின்னர், ஒரு பண்ணைவீட்டுக்குச் சென்று அங்கிருந்த மாடு, கன்று, குதிரை, வாத்து போன்ற விலங்குகளைப் பார்த்து பரவசப்பட்டனர். இன்ப அதிர்ச்சியாக அந்தப் பண்ணைக்காவலர் ஒரு மலைப்பாம்பைக் கொண்டுவந்து காண்பித்தார். ஒரு மாறுபட்ட பொங்கல் கொண்டாட்டத்தை மனமில்லாமல் நிறைவு செய்து இல்லம் திரும்பினர்.

செய்திக்குறிப்பிலிருந்து

© TamilOnline.com