க்ளீவ்லேண்ட்: MS பக்தி சிம்ஃபொனி
மார்ச் 27, 2016 காலை 8 மணிக்கு க்ளீவ்லேண்ட் தியாகராஜ ஆராதனையில், கர்நாடக சிம்ஃபொனி நடைபெறும். இந்த ஆண்டு 'பாரத்ரத்னா' திருமதி. எம்.எஸ். சுப்புலட்சுமி அவர்களை கௌரவிக்கும் வகையில் 'MSS பக்தி சிம்ஃபொனி' என்ற கருத்தில் அமையும். இசையரசியின் குரலால் புகழ்பெற்ற கிருதிகளும், பக்திப் பாடல்களும் இந்த சிம்ஃபொனியில் வழங்கப்படும். மேற்கத்திய இசையை நமது பாரம்பரிய கர்நாடக இசையுடன் ஒருங்கிணைத்து வித்வான் திரு. கே.என்.சசிகிரணால் வடிவமைத்து நடத்தப்படுகிறது இந்தக் கர்நாடக சிம்ஃபொனி.

இந்த மாபெரும் கலையரசியைப் பெருமைப்படுத்தும் வகையில், சிறுமியரும், பெண்களும் பெருமளவில் பங்கேற்க வருமாறு அமைப்பாளர்கள் வேண்டிக்கொள்கிறார்கள்.

விதிமுறைகள்:
நான்கிலிருந்து தொடங்கி எந்த வயதினரும் பங்கு கொள்ளலாம். எம்.எஸ். அம்மாவின் ரசிகர்கள் எவரும் பங்குபெறலாம்
முரண்பாடற்ற சுருதி மற்றும் லயம் அவசியமானது
மாணவர்கள், கீதமோ அதற்கு மேலோ கற்றிருப்பது அவசியம்
மாணவர்கள், வாய்ப்பாட்டு அல்லது இசைக்கருவி (மிருதங்கம், தபலா உள்பட) ஏதாவது ஒன்றுக்கு பெயரை பதிவு செய்து கொள்ளலாம்.
இசைப்பள்ளி மூலமாகப் பதிவு செய்தால், யார் போட்டியில் பங்கேற்பது என்பதை குருவே தேர்ந்தெடுப்பார்.
பங்குபெறும் அனைவருக்கும் பாராட்டுச் நற்சான்றிதழ், பதக்கம் ஆகியவை சிம்ஃபொனி சார்பாக வழங்கப்படும்.

பயிற்சி:
சிம்ஃபொனியில் பாடவிருக்கும் பாடல்களைக் கேட்டு, தமது குருவிடம் பயிற்சிபெற ஏதுவாகப் பாடல்கள் இணையதளத்தில் வழங்கப்படும்.
இதைத்தவிர, பத்துக்கும் மேற்பட்டவர்கள் பங்குகொள்ளும் ஊர்களில், எம் சார்பாக இயங்கும் குருக்கள் அந்தந்த ஊரிலேயே ஒத்திகை நடத்துவார்கள்.

கட்டணம்:
$150 - முன்னாளில் பங்கேற்றிருந்தாலோ அல்லது இசைப்பள்ளி மூலமாக வந்திருந்தாலோ.
$200 - தனிப்பட்ட முறையில் பங்கேற்கும் புதியவர்களுக்கு.
உடை விதிமுறை, பாடல் பட்டியல் மற்றும் முழு விவரங்களுக்கு: www.carnaticworld.com

MS மேளா - ஸ்ப்ரிங் 2016:
திருமதி எம்.எஸ். அவர்களின் நூற்றாண்டை முன்னிட்டு, அவரது கொள்ளுப்பேத்தி ஐஸ்வர்யா ஸ்ரீனிவாசன் அவர்களுடன், கர்நாடிகா சகோதரர்கள் கே.என். சசிகிரண் மற்றும் சித்ரவீணை கணேஷ், இவர்களுடன் உள்ளூர் இசை குருக்களுடன் மாணவர்களும் இணைந்து, ஒரு பக்தி சமர்ப்பணத்தை அமெரிக்காவின் சில மாகாணத்தில் நடத்தவுள்ளார்கள். ஸ்மிதா மாதவ் அவர்களின் நாட்டிய அமைப்பின் வழியாக நிருத்ய கதா கச்சேரியும், கர்நாடிகா சகோதரர்களின் வாய்ப்பாட்டும், பி. சுசித்ரா அவர்களின் கதா காலட்சேபமும் நடைபெறும். உள்ளூர் சங்கீத் சாம்ராட் பங்கேற்பாளர்கள் சிறு இசை நிகழ்ச்சிகளை இந்த மேளாவில் வழங்குவார்கள்.

உங்கள் ஊரில் இந்த மேளாவை நடத்த விரும்பினால் knshashikiran@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்.

வித்யா கிடாம்பி,
க்ளீவ்லாண்ட், ஒஹையோ

© TamilOnline.com