'லாஸ்யா' கல்லூரி நடனப்போட்டி
மார்ச் 12, 2016 அன்று மாலை 5:00 முதல் 8:30 மணிவரை கல்லூரி மாணவ, மாணவியருக்கான 'லாஸ்யா' என்ற இந்திய நடனப் போட்டி பெர்க்கலி பல்கலையால் நடத்தப்பட உள்ளது. இதில் 10 நடனக்குழுக்கள் El Cerrito Performing Arts Theater (540 Ashbury Ave., El Cerrito) அரங்கில் பங்கேற்றுப் போட்டியிட உள்ளன. இவை கல்லூரிப் பருவத்தினரின் கற்பனையாற்றலை வெளிக்கொணரும் விதமாக அமைந்திருக்கும். இந்தியப் புராணங்கள் தொடங்கி, சமுதாயம், உலக கலாசாரம் என்று பல்வேறு புலங்களை இந்த நடனப்படைப்புகள் அலசுபவையாக இருக்கும்.

'லாஸ்யா'வின் நோக்கம் பாரம்பரிய நடனமொழியில் நவீனத்தை விளக்க இளைய தலைமுறையினருக்கு ஒரு மேடை அமைத்துத் தருவதாகும். விரிகுடாப்பகுதி மக்கள் இந்தப் போட்டிகளைக் கண்டு களிக்கலாம்.

நுழைவுச்சீட்டு
பொதுமக்கள் - $18
பெர்க்கலி பல்கலை பேராசிரியர்/மாணவர் - $15

வலைமனை: www.desidancenetwork.org/laasya
மின்னஞ்சல்: laasya2016@gmail.com
சீட்டுகள் வாங்க: eventbrite.com
தொலைபேசி: 408-507-6422

இலக்கியா பழனிச்சாமி,
நிகழ்ச்சி அமைப்பாளர், பெர்க்கலி பல்கலை

© TamilOnline.com