அவ்வை தமிழ் மையம்: தமிழ் இசை விழா
பிப்ரவரி 27, 2016 அன்று Centennial High School (6901 Coit Rd, Frisco, TX 75035) வளாகத்தில் அவ்வை தமிழ் மையத்தின் சார்பில் தமிழிசை விழா நடைபெறும். போட்டி ஏதும் இல்லாமல், குழந்தைகளின் திறமைகளுக்கு வாய்ப்பளிக்கும் மேடையாக இவ்விழா நடத்தப்படும். 5 முதல் 17 வயதுவரை உள்ளோர் பங்கேற்கலாம்.

இசைப்பள்ளிகள், குழுக்களிலிருந்தும் குழந்தைகள் பங்கேற்கின்றனர். செவ்விசை (classical) அல்லது பகுதிச் செவ்விசை சார்ந்த பாரம்பரிய தமிழ்ப் பாடல்கள், பக்தி இலக்கியப் பாடல்கள் அல்லது ராகம்சார்ந்த நல்ல திரையிசைப் பாடல்களைப் பாடலாம். பங்கேற்கவோ, பார்வையாளர் நுழைவுக் கட்டணமோ கிடையாது.

தனிநபருக்கு: 3 முதல் 4 நிமிடம் வழங்கப்படும்.

குழுக்களுக்கு: மொத்தம் 9 முதல் 12 நிமிடம்வரை ஓர் இசைப்பள்ளி அல்லது குழுவிற்கு வழங்கப்படும். மேடையில் ஒரே நேரத்தில் ஒரு பாடலுக்கு 4 அல்லது 6 நபர்கள் இருக்க வேண்டும்.

பங்கேற்போர் விரும்பினால் பின்னணி இசைக்கருவிகள் கொண்டுவரலாம்.
பதிவுசெய்யக் கடைசி நாள்: பிப்ரவரி 12, 2016
முழுமையான விதிமுறைகள் பார்க்க: avvaitamil.org

தொடர்புக்கு:
தொலைபேசி: 214-901-7735
மின்னஞ்சல்: info@avvaitamil.org

செய்திக்குறிப்பிலிருந்து

© TamilOnline.com