பிப்ரவரி 6, 2016 அன்று சன்னிவேல் ரெமிங்டன் டிரைவில் உள்ள சன்னிவேல் தியேட்டரில் 'ஸமரா - ஒரு பெண்ணின் போராட்டம்' என்னும் பரதநாட்டிய நிகழ்ச்சியை திருமதி. நைனா சாஸ்திரி வழங்க
இருக்கிறார். கிழக்கு விரிகுடாப்பகுதியைச் சேர்ந்த இவர், உஷாஞ்சலி நடனப்பள்ளியின் நிறுவனரும் கலை இயக்குநரும் ஆவார். இந்த நிகழ்ச்சியின் வருமானத்தைச் சென்னை வெள்ளநிவாரணப் பணிக்குத் தரப்படும்.
புராணமும் வரலாறும் போற்றும் ஜான்சி ராணி, ராணி கோசலை மற்றும் துர்கா போன்ற பெண்கள் சந்தித்த பல்வேறு போராட்டங்களை 'ஸமரா' வர்ணிக்கிறது. அவை உணர்ச்சி அல்லது ஆன்மீகப் போராட்டம்
ஆகவோ, ஆண்களுடன் தோளோடு தோள்கொடுத்துப் போரிடும் களமாகவோ இருக்கலாம்.
விரிகுடாப் பகுதியைச் சேர்ந்த இலக்கியவாதி திரு. கே.வி. ராமப்ரசாத் இதற்கெனச் சில பாடல்கலை இயற்றியுள்ளர். இசை/நடனக் கலைஞர் திருமதி. ஸ்நிக்தா வெங்கடரமணி இசையமைத்துப் பாடுகிறார்.
அவர்களுடன் மிருதங்கம் திரு ரவிந்திரபாரதி, நட்டுவாங்கம் திருமதி. சேதனா சாஸ்திரி, வயலின் திரு. சுசீலா நரசிம்மன் மற்றும் புல்லாங்குழல் திரு. பிரசன்னா ராஜன் ஆகியோர் பங்கேற்பார்கள்.
மேலும் அறிய வலைமனை: www.ushanjali.com சீட்டு வாங்க: events.sulekha.com மின்னஞ்சல்: ushanjali2008@gmail.com தொலைபேசி: 510-742-9303
நளினி கலவசர்லா, சன்னிவேல், கலிஃபோர்னியா |