செப்டம்பர் 9, 2005 அன்று லாஸ் ஏஞ்சலஸ் மாலிபு கோயிலில் பிள்ளையார் சதுர்த்தி விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. சங்கீதாவின் கிளாரினெட் இன்னிசை விருந்துடன் லஷ்மிநாராயணா இசைப் பள்ளிக் கலைஞர்கள் சக்திசுந்தர், ஹரிஷ், அஷிஷ், சுரேஷ், ஸ்ரீதர், ஸ்ரீகாந்த், பத்மா மல்லம், தேவிகா, சாஹிதி, ஹம்ஸினி, அபர்ணா, திவ்யா, காவ்யா, செளம்யா, சஞ்சனா, சங்கீதா, ரமா கந்த், கீர்த்தி, உமா, கீதா ஆகியோர் ஸ்வரஜதி, தில்லானா, அஷ்டபதி பாடல்களால் விநாயகருக்கு இசைவிருந்து படைத்தனர். அந்தரரூப சிவதேவா கிதார் வாத்தியத்திலும், சங்கீதா வாய்ப்பாட்டு, கிளாரினெட், வயலின் வாத்தியத்திலும் இசைமாலை தொடுத்தனர்.
மற்றும் சங்கீதாவின் இசை சபையை மெய்மறக்கச்செய்தது. இறுதி யில் கணபதி பஜனையுடன் லஷ்மிநாராயணா இசைப் பள்ளியின் வருடாந்திரக் கலை நிகழ்ச்சி விமரிசையாக நிறைவு பெற்றது. |