பிரணவ் சாயிராம்
8 வயது மற்றும் அதற்குக் கீழ்ப்பட்ட பிரிவில் பிரணவ் சாயிராம் US ஜூனியர் நேஷனல் செஸ் சாம்பியன்ஷிப்பை வென்றுள்ளார். US செஸ் ஃபெடரேஷன் லிவர்மோர் சமுதாய மையத்தில் நடத்திய இந்தப் போட்டிகளில்

5.0/5.0 என்ற புள்ளிகளில் அவர் இந்தப் பட்டத்தை வென்றுள்ளார்.

ஏப்ரல் 2014ல் இவர் செஸ் போட்டிகளில் பங்கேற்கத் தொடங்கினார். சான் ஹோசேயின் சாம்பியன் பள்ளியில் செஸ் பயிற்சியைத் தொடங்கினார். இவரது பெற்றோர் சாயிராம் மற்றும் சங்கீதா தன் மகனின்

ஆர்வத்துக்கு முழுமையாகத் துணைநிற்கின்றனர். கோச் டெட் கேஸ்ட்ரோவிடம் (Norcal House of Chess) ஓராண்டுக்கு மேலாகப் பயின்றார். இப்போது இந்தியாவின் சோஹன் பட்கேவிடம்

(ChessGurukul) ஸ்கைப்மூலம் கற்கிறார்.

மூன்றாம் வகுப்பில் படிக்கும் பிரணவுக்கு கூடைப்பந்து ஆடவும் பார்க்கவும் பிடிக்குமாம். அவன் தீவிர வாரியர்ஸ் ரசிகன்கூட. திரு. ரவீந்திரபாரதி ஸ்ரீதரன் அவர்களிடம் மிருதங்கம் பயில்வது அவனது

இசையார்வத்துக்குத் தீனியாக இருக்கிறது. அடித்து ஆடு பிரணவ்! வெற்றிகள் குவியட்டும்.

தகவல்: சாய்ராம்

© TamilOnline.com