விசாரணை


தினேஷ், சமுத்திரக்கனி, ஆனந்தி, ஆடுகளம் முருகதாஸ் உள்ளிட்ட பலர் நடிக்கும் படம் விசாரணை. வெற்றிமாறன் இயக்குகிறார். ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார். எழுத்தாளரும், ஆட்டோ ஓட்டுநருமான கோவையைச் சேர்ந்த சந்திரகுமார் எழுதிய 'லாக் அப்' என்ற நாவலை அடிப்படையாக வைத்து இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. மனித உரிமைகள் மீறலை அப்பட்டமாகக் காட்சிப்படுத்தியிருக்கும் இப்படம் வெனிஸ் சர்வதேசத் திரைப்பட விழாவில் பங்குபெற்று சிறந்த படத்துக்கான விருதை வென்றது. இந்தியத் திரைப்படம் ஒன்று, இவ்விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டிருப்பது இதுவே முதல்முறை. ஜனவரி இறுதி அல்லது ஃபிப்ரவரி முதல் வாரத்தில் படம் வெளியாக உள்ளது.

அரவிந்த்

© TamilOnline.com