கணிதப்புதிர்கள்
1. 23, 45, 88, 173... இந்த வரிசையில் அடுத்து வரவேண்டிய எண் எது, ஏன்?

2. சங்கரிடம் இருக்கும் பந்துகளைப்போல் சுரேஷ் மூன்றுமடங்கு வைத்திருக்கிறான். இருவரிடமும் உள்ள பந்துகளின் மொத்த எண்ணிக்கை 36. சங்கர், சுரேஷ் ஒவ்வொருவரிடமும் எத்தனை பந்துகள் உள்ளன?

3. ராதாவின் வயதைப்போல அவள் தாயின் வயது ஐந்து மடங்கு. தந்தையின் வயது ஆறு மடங்கு. அவள் தாயின் வயதையும், தந்தையின் வயதையும் பெருக்கினால் 1470 வரும் என்றால் ராதா, அவள் தாய், தந்தையின் வயது என்ன?

4. ஒருவனிடம் 100 நாணயங்கள் இருந்தன. அவற்றை தினந்தோறும் தனது சேமிப்பு உண்டியலில் போட்டு வந்தான். முதல்நாள் எத்தனை நாணயங்களை உண்டியலில் போட்டானோ அதைவிட நான்கு நாணயங்கள் அதிகமாக அடுத்த நாள் போடுவான். ஐந்தாம் நாள் உண்டியல் போட்டதும் அவன் கையிருப்பு தீர்ந்துவிட்டது. அப்படியானால் அவன் தினந்தோறும் எத்தனை நாணயங்களை உண்டியலில் செலுத்தி வந்திருப்பான்?

5. ஒரு விடுதியில் சில அறைகள் இருந்தன. பயணிகள் சிலர் அறைக்கு ஒருவர் வீதம் தங்க நான்கு பயணிகள் மீதம் இருந்தனர். அறைக்கு இருவர் வீதம் தங்க நான்கு அறைகள் மீதம் இருந்தன. என்றால் அறைகள் எத்தனை, பயணிகள் எத்தனை?

அரவிந்த்

விடைகள்

© TamilOnline.com