ஓட்ஸ் கட்லெட்
தேவையான பொருட்கள்
ஓட்ஸ் - 1 கிண்ணம்
உருளைக்கிழங்கு (வேகவைத்து மசித்தது) - 2
பச்சைப்பட்டாணி (வேகவைத்தது) - 2 மேசைக்கரண்டி
வெங்காயம் (பொடியாக நறுக்கியது) - 1 கிண்ணம்
தேங்காய்த்துருவல் - 1/4 கிண்ணம்
கொத்துமல்லி - சிறிதளவு
எலுமிச்சம்பழம் - 1 மூடி
பச்சை மிளகாய் - 4
உப்பு - தேவைக்கேற்ப
ரஸ்க் தூள் - 1/4 கிண்ணம்
எண்ணெய் - சிறிதளவு

செய்முறை
ஓட்ஸில் வெந்நீர் விட்டுக் கலந்து பத்துநிமிடம் ஊறவைக்கவும். அத்துடன் உப்பு, உருளைக்கிழங்கு, பட்டாணி, வெங்காயம், பொடியாக நறுக்கிய பச்சைமிளகாய், தேங்காய்த்துருவல், பொடியாக நறுக்கிய கொத்துமல்லி எல்லாவற்றையும் போட்டுப் பிசைந்து கொள்ளவும். இதில் எலுமிச்சம்பழம் பிழிந்து சிறு சிறு கட்லெட்டுகளாகத் தட்டி, ரஸ்க் தூளில் பிரட்டி எடுக்கவும். தோசைக்கல்லில் எண்ணெய் ஊற்றி, அதில் கட்லெட்டைப் போட்டு நன்கு சிவந்ததும் எடுக்கவும். தோசைக்கல்லில் போட்ட பிறகு சுற்றிலும் எண்ணெய் விடவேண்டும். தொட்டுக்கொள்ள தக்காளி சாஸ் சுவையாக இருக்கும்.

தங்கம் ராமஸ்வாமி,
பிரிட்ஜ் வாட்டர், நியூஜெர்ஸி

© TamilOnline.com