தமிழ்நாடு அறக்கட்டளையின் அரிசோனா கிளைத் தலைவராக திரு. சாமி கருப்பண்ணாவும், செயலராக மருத்துவர் திருமதி ஜெயந்தி சுப்பையாவும் நியமிக்கப்பட்டுள்ளனர். அக்டோபர் 30ம் தேதியன்று மருத்துவர்கள்
ஜெயந்தி-சேகர் தம்பதியினர் இல்லத்தில் தமிழ்நாடு அறக்கட்டளையின் செயல்திட்டங்கள் பீனிக்ஸ் நகரத் தமிழர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டது. துணைத்தலைவர் முனைவர் சோமலெ சோமசுந்தரம் TNF-ABC
கல்வித்திட்டம், 'அன்பாலயம்' மனிதநேயத் திட்டம் போன்ற பலவற்றை விளக்கிப் பேசினார். அவருடைய உரையைக் கேட்ட ஐம்பதுக்கும் மேற்பட்ட குழந்தைகளும், பெற்றோர்களும் அரிசோனாவில் TNF கிளை
தொடங்க ஆர்வம் தெரிவித்து, ஆயுள்கால உறுப்பினர் சாமி கருப்பண்ணா தலைமையில் புதிய முயற்சிகளைத் துவக்கியுள்ளார்.
அக்டோபர் 31ம் தேதியன்று அரிசோனா தமிழ்ச்சங்கத் தலைவர் சதீஷ் சௌந்தரராஜன் மற்றும் பல செயற்குழு உறுப்பினர்கள், தமிழ்ப் பள்ளி ஒருங்கிணைப்பாளர்களுடன் நடைபெற்ற சந்திப்பில், தமிழ்நாடு அறக்கட்டளை
சகோதர தமிழ் அமைப்புக்களோடு இணைந்து தமிழகத்தில் நல்ல திட்டங்களுக்கு உதவ விரும்புவதாக சாமி கருப்பண்ணாவும் சோமலெ சோமசுந்தரமும் தெரிவித்தனர். இதன் விளைவாக நவம்பர் 21 அன்று நடைபெற்ற
அரிசோனா தமிழ்ச்சங்கத்தின் 'சரவெடி' தீபாவளி விழாவில் தகவல்மையம் வைத்து TNF பற்றிய செய்திகளை அரிசோனா தமிழ் மக்களிடம் பகிர்ந்து கொண்டனர்.
பங்குபெறவும் விவரங்களுக்கும்: சாமி கருப்பண்ணா - samy_karuppana@yahoo.com இணையம்: http://tnfusa.org/chapter/Arizona முகநூல்: www.facebook.com
N.S .பழனிசாமி, ஃபீனிக்ஸ் |