2015 நவம்பர் 14ம் தேதி முதல் 24ம் தேதிவரை, அம்மா ஸ்ரீ மாதா அமிர்தானந்தமயி தேவி, கலிஃபோர்னியா விரிகுடாப்பகுதிக்கும், மிச்சிகனில் உள்ள டெட்ராயிட்டுக்கும் வருகை தந்திருந்தார். அன்பின் அடையாளமான அம்மா, தம்மைக் காணவந்தோரைப் பரிவோடு அரவணைத்து, அளவற்ற அன்பை வழங்கினார். தினமும் ஆன்மீக சொற்பொழிவு, தியானம், பஜனை மற்றும் அம்மாவின் தரிசனம் நடைபெற்றன. ஆன்மீக முகாமில் (retreat) ஆன்மீக மற்றும் தியான வகுப்புகள், தன்னலமற்ற சேவை, அம்மாவோடு கேள்வி-பதில், அம்மாவின் உணவு பரிமாற்றம், ஒருங்கிணை அமிர்தா தியானம் (Integrated Amrita Meditation) ஆகியவை நடைபெற்றன.
"ஆன்மிகமும், உலகியலும் இரண்டல்ல. அலையில் நீந்தக் கற்றவர்கள் கடல் அலையில் நீந்தி மகிழ்கிறார்கள். நீச்சல் அறியாதவர்கள் சோர்ந்து போகிறார்கள். உலகவாழ்வில் சோர்ந்துபோகாமல் எப்படி முன்னேறுவது என்பதை ஆன்மிகம் கற்பிக்கிறது. ஓர் இயந்திரத்தை வாங்கினால் அதன் கையேட்டில் அதை எப்படி உபயோகிப்பது என்பது எழுதப்பட்டிருப்பதைப் போன்றது ஆன்மிகம்" என்கிறார் அம்மா.
மனித மேம்பாட்டுக்காக அம்மா ஆற்றும் பொதுநலத் தொண்டுகள் பற்றி அறிய: www.EmbracingTheWorld.org வலைமனை: www.amma.org
சூப்பர் சுதாகர், சான் ரமோன், கலிஃபோர்னியா |