அட்லாண்டா தமிழ் சபையின் கிறிஸ்து பிறப்பு நிகழ்ச்சிகள் பின்வருமாறு: நன்றியறிதலின் (Thanksgiving) நாட்கள் முடிந்தவுடன் ஒவ்வொரு வாரமும் வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மாலை நேரத்தில் ஒவ்வொரு வீடுதோறும் சபை போதகர் பால்மர் பரமதாஸ் அவர்களும் சபையோரும் போய் கிறிஸ்துமஸ் துதிப்பாடல்களைப் (Christmas Carols) பாடி, கிறிஸ்து பிறந்த நற்செய்தியைக் கூறி ஆசீர்வதிப்பார்கள். சபையின் பாடல் குழுவினர் புதிய மற்றும் சிறப்பு கிறிஸ்துமஸ் பாடல்களைப் பாடும் நிகழ்ச்சி டிசம்பர் 6ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 10:00 மணிக்கு நடைபெறும்.
சபையின் குழந்தைகள்/வாலிபர்களின் திறமைகளை வெளிக்கொண்டு வரும் நோக்கோடு கலைநிகழ்ச்சியை குழந்தைகள் ஊழிய ஒருங்கிணைப்பாளரும் ஆசிரியைகளும் தயாரித்து இயக்கும் நாடகம் மற்றும் கலைநிகழ்ச்சிகள் ((Children & Youth Christmas Service) டிசம்பர் 13ம் தேதி ஞாயிறு காலை 10:00 மணிக்கு நடைபெறும். முடிவிலே கிறிஸ்துமஸ் தாத்தா வந்து சிறுபிள்ளைகளுக்கு வெகுமதிகளை அளிப்பார். குடும்பப் பாடல் ஆராதனை (Family Sing Song Service) நிகழ்ச்சி, குடும்பத்தினரின் திறமைகளை வெளிப்படுத்தும் வண்ணமாக ஆலயத்தில் டிசம்பர் 20ம் தேதி ஞாயிறு காலை 10:00 மணிக்கு நடைபெறுகின்றது.
நிகழ்ச்சிகளின் உச்சக்கட்டமாக டிசம்பர் 25ம் தேதி வியாழன் காலை 10:00 மணிக்கு கிறிஸ்துமஸ் ஆராதனை நடைபெறும். அதில் Rev. பால்மர் பரமதாஸ் அவர்கள் விசேசசெய்தி அளிப்பார்கள். பாடல்குழுவினர் சிறப்புப் பாடல்களைப் பாடுவார்கள். மதியம் கிறிஸ்துமஸ் பல்சுவை விருந்து வழங்கப்படும்.
2015ம் வருடத்தை ஆலயத்தில் தொடங்கியோர் இந்த வருடத்தை ஆலயத்தில் முடித்து, 2016 புதுவருடத்தை ஆலயத்தில் ஆரம்பிக்கும் வண்ணம் டிசம்பர் மாதம் 31ம் தேதி வியாழன் இரவு 10:30மணிக்கு விசேசித்த காத்திருப்பு ஆராதனை (Watchnight Service) நடைபெறும்.
மேலும் விபரங்களுக்கு: www.atlantatamilchurch.org
பால்மர் பரமதாஸ், அட்லாண்டா, ஜார்ஜியா |