GOD: 'கிருஷ்ணானுபவம்' கலைநிகழ்ச்சி
டிசம்பர் 13 சனிக்கிழமை மாலை 4:00 மணிக்கு, சான் ஹோசே CET SOTO அரங்கத்தில் குளோபல் ஆர்கனைசேஷன் ஆஃப் டிவைனிடி (GOD-USA) அமைப்பின் சார்பாகத் திருமதி. இந்துமதி கணேஷ், செல்வி. அக்ஷயா கணேஷ் மற்றும் நிருத்யோல்லாசா டான்ஸ் அகாடமி மாணவிகள் இணைந்து 'கிருஷ்ணானுபவம்' என்ற கலைநிகழ்ச்சியை வழங்குகின்றனர். இந்நிகழ்ச்சியின் வழியாகத் திரட்டப்படும் நிதி இந்தியாவில் சமூக/ஆன்மீக சேவைப் பணிகளுக்குப் பயன்படுத்தப்படும்.

யமுனாநதி தீரத்தில் வளர்ந்த ஸ்ரீகிருஷ்ணன் பிருந்தாவனவாசிகளின் ஆன்மாவில் ஒன்றெனக் கலந்தவன். தனது விளையாட்டுத்தனம், கேலி, குறும்புகளாலும் தன்னைமறந்த ஆன்மீக உணர்வுநிலையை ஒவ்வொருவரும் அடைய அவன் உதவுகிறான். குறும்பு கொப்பளிக்கும் அவனது லீலைகள் பிரபஞ்ச உயிர்கள் அனைத்திற்கும் அன்னையைப்போல் அன்பையும், அரவணைப்பையும், ஆனந்தத்தையும் அளிப்பவை. கிருஷ்ணலீலை வெளிப்படுத்தும் தெய்வீகக் கருணை, தீராத காதல் ஆகியவற்றை நடனம்வாயிலாக வெளிப்படுத்தவுள்ளனர் நிருத்யோல்லாசா பள்ளி ஆசிரியை இந்துமதி கணேஷ் மற்றும் மாணவிகள்.

நடன ஒருங்கமைப்பு, நட்டுவாங்கம் - இந்துமதி கணேஷ்; நடன ஒருங்கமைப்பு - .அக்ஷயா கணேஷ்; நட்டுவாங்கம் - வித்யா ஐயர்; வாய்ப்பாட்டு - ரூபா மஹாதேவன்; மிருதங்கம் - ஆதித்யா கணேஷ்; வயலின் - ஸ்ருதி சாரதி; புல்லாங்குழல் - அஷ்வின் கிருஷ்ணகுமார்; மோர்சிங் - ஏ. மஹாதேவன்.

முழு விவரங்களுக்கு: godivinity.org

ஜெயகணேஷ்,
ஃப்ரீமான்ட், கலிஃபோர்னியா

© TamilOnline.com