இந்திய கிறித்தவ சபை: கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்
கிறிஸ்து பிறப்பின் பண்டிகை கொண்டாடப்படும் இந்த டிசம்பர் மாதத்தில், சான் ரமோன் நகரில் டிசம்பர் 5ம் தேதியும், சான் ஹோசே நகரில் டிசம்பர் 12ம் தேதியும் இந்திய கிறித்துவ சபை சிறப்பு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்துள்ளது. சிறுவர்கள், இளைஞர்கள் பங்குபெறும் ஆடல், பாடல் நிறைந்த கலைநிகழ்ச்சிகள் இடம்பெறும். பாடகர் குழுவினரின் பன்மொழிப் பாடல்கள் முக்கிய சிறப்பம்சம். 12 வயதுக்குட்பட்ட சிறாருக்குப் பரிசுகள் வழங்கப்படும். அன்பின் விருந்தோடு நிகழ்ச்சி நிறைவுறும். பாகுபாடின்றி அனைவரும் அழைக்கப்படுகின்றனர்.

டிசம்பர் மூன்றாம் வாரத்தில் சிறைகளில் இருப்போரின் இருபதுக்கும் அதிகமான குடும்பங்களைச் சேர்ந்த சிறுவர்களுக்குப் பரிசுப் பொருட்களும் குடும்பத்திற்கு அவசியமான பொருட்களும் வழங்கப்பட உள்ளன.

சென்ற செப்டம்பர் மாதத்தில் நடத்தப்பட்ட அறுவடைப் பண்டிகையில் ஒரு பகல் முழுவதும் சிறாருக்கான விளையாட்டுகள், மாயாஜாலக் காட்சிகள், பொம்மலாட்டம், குதிரை சவாரி போன்றவை நடத்தப்பட்டன. இதன்மூலம் சேகரித்த பணம் சமூகசேவை நிறுவனங்களுக்கு அனுப்பப் பட்டது.

மேலும் அறிய வலைமனை காண்க: ChristIndia.org

போதகர் ரஞ்சன் சாமுவேல்,
சான் ஹோசே, கலிஃபோர்னியா

© TamilOnline.com