விரைவில் இசை


மகேந்திரன், திலீப் நாயகர்களாகவும், ஸ்ருதி ராமகிருஷ்ணா, அர்ப்பணா நாயகிகளாகவும் நடிக்கும் படம் விரைவில் இசை. டெல்லி கணேஷ், நெல்லை சிவா உள்ளிட்ட பலர் முக்கிய வேடமேற்றுள்ளனர். பாடல்களை அண்ணாமலையும் வைரபாரதியும் எழுத, அறிமுக இசையமைப்பாளர் எம்.எஸ். ராம் இசையமைக்கிறார். வி.எஸ்.பிரபா இயக்கம். "இதை லவ் ஸ்டோரி என்று சொல்வதைவிட லைவ் ஸ்டோரி என்றே கூறலாம். அப்படி ஒரு யதார்த்தமான கதை. நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கி வருகிற குழந்தை பாலியல் வன்முறை படத்தின் க்ளைமாக்ஸில் மையம் கொண்டுள்ளது" என்கிறார். விரைவில் (இசை) வெளியாகி வெற்றி பெறட்டும்.

அரவிந்த்

© TamilOnline.com