காந்தேஷ்வர்


"போலி இயக்குநர் ஒருவரைச் சந்தித்து நடிக்க வாய்ப்புக் கேட்கிறார் ஓர் இளம்பெண். அவரும் சம்மதித்து அந்தப் பெண்ணை கதாநாயகி ஆக்குவதாகச் சொல்கிறார். அவள் ஹீரோயின் கனவில் மிதக்கிறாள். ஆனால் இயக்குநரின் எண்ணமோ வேறு மாதிரி. ஏமாற்றப்பட்டதை அறிந்த இளம்பெண் ஒரு தடாலடி முடிவெடுக்கிறாள். அது என்ன முடிவு? திரைத்துறை சார்ந்த போலிகளைத் தோலுரித்துக் காட்டும் இப்படத்தில் சிரில், சித்ரலேகா, நாராயணன், காயத்ரி ஆகியோர் நாயக, நாயகிகளாக அறிமுகமாகின்றனர். இவர்களுடன் போண்டா மணி, நெல்லை சிவா உள்ளிட்டோர் நடிக்கின்றனர். எழுதி, இயக்குகிறார் பாலமுருகன்.

அரவிந்த்

© TamilOnline.com