TNF: கோடைக்கால சேவைப் பயிற்சி
அமெரிக்காவில் பிறந்து, வளர்ந்துவரும் இளையதலைமுறை தமிழ்ச் சிறுவர், சிறுமியர்முதல் கல்லூரிகளில் பயிலும் இளையோர்வரை தமிழகத்தில் கோடை விடுமுறை மாதங்களில் தன்னார்வத் திட்டங்களில்

பணிபுரியும் அரிய சேவை வாய்ப்பைத் தமிழ்நாடு அறக்கட்டளை 2014ல் தொடங்கியது. கடந்த இரண்டு வருடங்களில் இருபது இளையோர் பங்கேற்று மகிழ்ந்துள்ளனர்.

சென்னை அரசுப் பள்ளி, மரபணு ஆராய்ச்சி மையம், சீர்காழியில் மனவளர்ச்சி குன்றிய குழந்தைகள் இல்லம், வேதாரண்யம் பெண்கள் மேம்பாட்டுத் திட்டம், நாமக்கல், நாகப்பட்டினம், மதுரை, சேலம்,

காரைக்குடி, வேலூர், சிதம்பரம் பகுதிகளில் TNF-ABC கல்வித் திட்டம் எனப் பல்வேறு வகைகளில் சேவை செய்யும் வாய்ப்புக்களை TNF கோடைக்கல்வி மற்றும் சேவைப்பயிற்சி அரங்கம் அளிக்கின்றது. 2015ம்

வருடக் கோடை மாதங்களில் இப்பயிற்சி அரங்கில் பங்குபெற்ற நியூ ஜெர்ஸியைச் சேர்ந்த பதினொன்றாம் வகுப்பு மாணவி வித்யா சுந்தர், ஓக்லஹோமாவைச் சேர்ந்த 7ம் வகுப்பு மாணவன் நடேஷ் வைத்தியநாதன்

போன்றோர் தங்கள் அனுபவத்தைப் பல்வேறு தமிழரங்கங்களில் பகிர்ந்து கொண்டுள்ளார்.

ஜூலை 16முதல் 30வரை தமிழகத்தில் நடைபெற உள்ள 2016 சேவைப் பயிற்சியில் கலந்துகொள்ள விரும்புவோர் தொடர்புகொள்ள
தொலைபேசி: 610-444-2628
மின்னஞ்சல்: tnf.philly@gmail.com
இணையதளம்: tnfusa.org

பிரபாகர் முருகையா, சோமலே சோமசுந்தரம்

© TamilOnline.com