கணிதப்புதிர்கள்
1) 72927. இது ஒரு பாலிண்ட்ரோம் (palindrome) எண். இதிலிருந்து குறிப்பிட்ட எண்ணைக் கழித்தால் இதற்கு முந்தைய பாலிண்ட்ரோம் எண்ணும், குறிப்பிட்ட எண்ணைக் கூட்டினால் அடுத்த பாலிண்ட்ரோம் எண்ணும் கிடைக்கும் என்றால் அந்த எண்கள் என்னவாக இருக்கும்?

2) ஒரு மருத்துவமனையில் 789 நோயாளிகள் இருந்தனர். அவர்களில் சிலர் பார்வையற்றவர்கள். சிலர் பேச முடியாதவர்கள். சிலர் கேட்க முடியாதவர்கள். 654 பேருக்குக் காது கேளாது. 321 பேரால் பேசமுடியாது என்றால் பார்வையற்றவர்கள் எத்தனை பேர்?

3) 3,5,8,13,22,? - வரிசையில் அடுத்து வரவேண்டிய எண் எது, ஏன்?

4) 1,9,9,6 என்ற எண்களையும் +, -, x, / போன்ற கணிதக்குறியீடுகளையும் பயன்படுத்தி 1000 விடையாக வரச் செய்யவேண்டும். இயலுமா?

5) இரண்டு எண்களின் கூட்டுத்தொகை 110. முதல் எண்ணின் பாதியுடன் முதல் எண்ணைக் கூட்டினால் அடுத்த எண் வரும் என்றால் அந்த எண்கள் எவை?

அரவிந்த்

விடைகள்

© TamilOnline.com