Vibha-சிகாகோ: 'வழங்கும் கலை'
அக்டோபர் 24, 2015 அன்று நேப்பர்வில் (இல்லினாய்ஸ்) பாலிவுட் ரிதம் ஸ்டூடியோவில் விபா-சிகாகோ The Art of Giving என்ற நிகழ்ச்சியை நடத்தியது. இது பெரியோருக்கு Zumba செயல்பட்டறையாகவும், குழந்தைகளுக்கு ஹாலோவீன் கொண்டாட்டமாகவும் அமைந்திருந்தது. எல்லோரும் உல்லாசமாகக் களித்த அதே நேரத்தில் ஓர் அரிய பணிக்கும் உதவினார்கள்.

விபா தன்னார்வத் தொண்டர்கள் நடத்தும் லாபநோக்கற்ற அமைப்பு. இதன் 2000 தொண்டர்கள் இந்தியா மற்றும் அமெரிக்காவின் 20 நகரங்களில் பரவியுள்ளார்கள். 1991 முதல் விபா இதுவரை 13 மில்லியன் டாலர் தொகையைத் திரட்டி 250க்கும் மேற்பட்ட குழந்தைகள்நலத் திட்டங்களை இந்தியாவிலும் அமெரிக்காவிலும் ஆதரித்துள்ளது. இதனால் 300,000 வறிய குழந்தைகள் பலனடைந்துள்ளன. "உள்ளூரில் செயல்பாடு, உலக அளவில் பயன்பாடு" என்பதில் விபாவின் சிகாகோ பிரிவு நம்பிக்கை வைத்துள்ளது. நிதி திரட்ட, விழிப்புணர்வு ஏற்படுத்த, தொண்டர்கள் தரும் நேரத்தை அவருக்கும் சமுதாயத்துக்கும் பயனுள்ளதாக்க எனப் பலவகைகளில் விபா செயல்படுகிறது.

நீங்கள் விபாவுடன் இணைந்து தொண்டாற்ற விரும்பினால் தொடர்புகொள்க: www.Vibha.org

ப்ரியா பாலசந்திரன்,
சிகாகோ (ஆங்கிலத்தில்)

© TamilOnline.com