TNF-சிகாகோ: நிதி திரட்டும் விழா
அக்டோபர் 24, 2015 அன்று ஒரு நிதி திரட்டும் விழாவைத் தமிழ்நாடு அறக்கட்டளை, R.R. இன்டர்நேஷனலுடன் இணைந்து அரோரா நகரின் மெட்டியா வேல்லி உயர்நிலைப் பள்ளியில் ஏற்பாடு செய்திருந்தது. 2015-16 ஆண்டுக்கான செயற்திட்டத்தை, அறக்கட்டளையின் முன்னாள் இயக்குனர் அமரர் திரு. பி.கே. சிவானந்தம் அவர்களின் பெயரில் செய்யும்பொருட்டு இது நடத்தப்பட்டது.

முதலில் அறக்கட்டளை சிகாகோ பிரிவின் தலைவர் திரு. வீரா வேணுகோபால் 2014-15 வருடத்தின் கடலூர் செயல்திட்ட வெற்றியை விளக்கினார்.

அடுத்து புதிய செயற்குழு உறுப்பினர்களான திருவாளர்கள். வீரா வேணுகோபால், சோமு, ஆனந்த் சு. அனந்தன், ஷண்முகசுந்தரம், அருளொளி ராஜாராம், நம்பிராஜன் வைத்திலிங்கம், ராஜேஷ் சுந்தரராஜன், சிவக்குமார் முருகேசன், திருவாட்டியர் ஶ்ரீ குருசாமி, தேவி அருள்மொழி அண்ணாமலை, சுஜாதா பரத்வாஜ் ஆகியோரும், ஆலோசகர்களான திருவாளர்கள் வெங்கடசாமி ராவில்லா, ரகு ரகுராமன், துக்காராம் ஆகியோரும் அறிமுகப்படுத்தப்பட்டனர். நெடுநாள் உறுப்பினர்களான திருவாளர்கள் மணி ராஜேந்திரன், P.K.அறவாழி, மைக் மாணிக்கம் (ஃப்ளோரிடா), பாஸ்கரன் மாதவன் யாவரும் செயல்நோக்கிகளாகப் பணியாற்றுவார்கள்.

நிகழ்ச்சியின் முத்தாய்ப்பாக 'எவர்கிரீன் எய்ட்டீஸ்' என்ற மெல்லிசைக் கச்சேரியில், இளையராஜாவின் தேர்ந்தெடுக்கப்பட்ட திரைப்படப் பாடல்களை முன்னணிப் பாடகர்களான கார்த்திக், சைந்தவி ஆகியோர் Berkeley Strings Ensemble என்ற இந்தோ அமெரிக்க இசைக்குழுவுடன் பாடினர். இது R.R. இன்டர்நேஷனல் நிறுவனர் திரு. ரகு ரகுராமன், டாக்டர். சுப்பிரமணியன் ராமமூர்த்தி முன்னிலையில், தமிழ்த் தொலைக்காட்சிகளில் பிரபலமான திருமதி. சுபஶ்ரீ தணிகாசலம் அவர்களின் மேற்பார்வையில் சிறப்பாக நடந்தேறியது.

நிகழ்ச்சியை சிகாகோ தமிழ்ச் சங்கத் தலைவர் மற்றும் தமிழ்நாடு அறக்கட்டளை சிகாகோ பிரிவுச் செயலர் திரு. சோமு சிறப்பாக தொகுத்து வழங்கினார். மேலும் விவரங்களுக்கு: www.tnfusa.org /www.tnfchicago.org

தேவி அருள்மொழி அண்ணாமலை,
சிகாகோ, இல்லினாய்

© TamilOnline.com