சன்னிவேல்: "Dance Like a Man"
Bay Area Drama Company இவ்வருடம் டிசம்பர் மாதம் 2ந்தேதி முதல் சன்னிவேல் திரையரங்கில் "Dance Like a Man" என்கிற ஆங்கில நாடகத்தை மேடையேற்றவுள்ளது. 'பெண்களே பெரிதும் பயிலும் பரதநாட்டிய உலகில் ஓர் ஆண்மகன் எத்தனை தூரம் செல்வான் தன் ஆர்வத்திற்காக?' என்ற கேள்விக்கு இந்நாடகம் விடைகாண முயல்கிறது. பரதக்கலைத் தம்பதியர் இருவர் சமூகத்தில் சந்திக்கும் சவால்களைத் துல்லியமாக வெளிப்படுத்துகிறார் இயக்குனர். தொன்றுதொட்டு வரும் நமது கலாசாரத்துக்கும் இன்றைய இளைஞர்களின் எழுச்சி எண்ணங்களுக்கும் இடையே நடைபெறும் போராட்டத்தைச் சிறப்பாக எடுத்துக்காட்டுகிறது இந்த நாடகம். 2004ம் வருடத்தில் தேசியவிருது பெற்ற பமீலா ரூக்ஸ் இயக்கிய ஆங்கிலப் படத்தைச் சார்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது. மகேஷ் தத்தானியின் இந்த உயிரோவியத்தை பசாப் பிரதான் தயாரிக்க, திறமைவாய்ந்த சிந்து சிங் இயக்குகிறார்.

நாடகம் ஒரு கலை மற்றும் கேளிக்கை. அதையும்மீறி நாடகம் சமுதாயத்தைச் சிந்திக்கவைக்கும் கருவியாகவும் செயல்படவேண்டும் என்ற உயரிய எண்ணத்தில் தொடங்கப்பட்டது விரிகுடாப்பகுதி நாடகக் கம்பெனி. எங்களுடன் இணைந்து செயல்பட விரும்புவோர் தொடர்புகொள்ள: www.bayareadrama.company

காட்சி நேரங்கள்:
டிச. 02 - இரவு 8:00 மணி
டிச. 06 - இரவு 8:30 மணி
டிச. 10 - இரவு 8:00 மணி
டிச. 12 - இரவு 8:00 மணி
டிச. 13 - இரவு 8.00 மணி

நுழைவுச்சீட்டுகளை முன்பதிய: www.bayareadrama.company/upcoming

அரங்கம்: சன்னிவேல் தியேட்டர், 550 கிழக்கு ரெமிங்டன் டிரைவ், சன்னிவேல் 94087
தொலைபேசி: சதீஷ் - 408-981-2512
மின்னஞ்சல்: tickets@bayareadrama.company

செய்திக்குறிப்பிலிருந்து

© TamilOnline.com