GOD USA: ராமானுஜம்ஜி நிகழ்ச்சிகள்
Global Organization for Divinity (GOD) மஹாரண்யம் ஸ்ரீஸ்ரீ முரளீதர சுவாமிகள் அவர்கள் இந்த ஆன்மீக அமைப்பை நிறுவினார். இது பின்வரும் செயல்பாடுகளை மேற்கொள்கிறது: நாமத்வார் மையங்கள் அமைத்தல்; கூட்டுப் பிரார்த்தனை, ஆன்மீக சொற்பொழிவுகள்; அன்னதானம்; இலவச மருத்துவ முகாம்கள்; கல்விக்கூடங்களுக்கு உதவுதல்; இளையோருக்குத் தார்மீகக் கல்வி, ஒழுக்கக் கல்வி; அலுவலகங்களில் அன்றாட வாழ்க்கை நடைமுறை பற்றிய விரிவுரை, பணிப்பட்டறை; பொதுநலச் சேவைகள்; கலாசார, பாரம்பரிய நிகழ்ச்சிகள் நடத்துதல்

இவ்வமைப்பு இந்தியா தவிர அமெரிக்கா, ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், மலேசியா ஆகிய நாடுகளில் உள்ளது. சாந்தீபனி குருகுலம், பிரேமிக வரதன் இலவச மருத்துவ கிளினிக், கோவிந்தபுரத்தில் இலவச ஆஸ்பத்திரி, வேத பாடசாலைகள், நாமத்வார் மையங்களும், சுவாமிஜியின் ஆசியுடன் இயங்கி வருகின்றன. அமெரிக்காவில் தற்சமயம் ஸ்ரீ சுவாமிஜியின் மூத்த சீடர்களில் ஒருவரான மதிப்பிற்குரிய திரு. ராமானுஜம்ஜி அவர்கள் பல்வேறு இடங்களில் சொற்பொழிவுகள் நிகழ்த்தி வருகிறார். இவர் இதுவரை டெட்ராய்ட் மற்றும் பாஸ்டனில் சொற்பொழிவுகள் நிகழ்த்தி உள்ளார். அக்டோபர் 25ம் தேதி பாஸ்டனில் ராதா கல்யாணம் நடை பெற்றது.

திரு. ராமானுஜம்ஜி அவர்கள் கீழ்க்கண்ட இடங்களில் சொற்பொழிவுகள் நிகழ்த்துவார்கள்:

மேரிலாண்ட்
அக். 30 முதல் நவ. 5 வரை - பாகவத சப்தாஹம்
அக். 31 மற்றும் நவ. 1 - ராதா கல்யாணம்

மினியாபோலிஸ்
நவ. 6 முதல் 11 வரை - (எடினா எஸ்.வி. கோவில் அரங்கம்) பக்த விஜயம்
நவ. 6 - சங்கீத உபன்யாசம்,
நவ. 7 - பண்டரிபுர சாதுக்கள் பற்றிய அபங்க மேளா; ‘Om Shanti -Onward to Harmony' கலைநிகழ்ச்சி (ரிட்ஸ் தியேட்டரில் நிதி திரட்டும் நிகழ்ச்சி)
நவ. 8 - ராதா கல்யாணம்

ஆல்ஃபரெட்டா
நவ. 12 முதல் 18 வரை (ஹனுமான் கோவில்) பாகவத சப்தாஹம்
நவ. 14 (கம்மிங் ப்ரூக்வுட் எலிமெண்டரி பள்ளி) மதுரகீதம் சிறப்பு இசைநிகழ்ச்சி

டாலஸ்
நவ. 19 முதல் டிச. 1 வரை (குருவாயூரப்பன் கோவில்) பாகவத சப்தாஹம்
சியாட்டில் டிச. 2 முதல் 8 வரை பாகவத சத்சங்கங்கள்

ஃப்ரீமான்ட் (விரிகுடாப்பகுதி)
டிச. 10 முதல் 16 வரை (சித்திவிநாயகர் கோவில்) பாகவத சப்தாஹம்; CET தியேட்டரில் திருமதி. இந்துமதி கணேஷின் ந்ரித்யோல்லாச நடனப் பள்ளி வழங்கும் நிதிதிரட்டும் கலைநிகழ்ச்சி.

ஹூஸ்டன் மன்வெல்
டிச. 19 முதல் 27 வரை நாமத்வாரில் மதுர உத்சவம் நிதி திரட்டும் நிகழ்ச்சிகள் தவிர மற்றவை இலவசம்.

நிகழ்ச்சி விவரங்களுக்கு
வலைமனை: www.godivinity.org
மின்னஞ்சல்: contact@godivinity.org
தொலைபேசி: 18304GODUSA

ஸ்ரீவித்யா ஸ்ரீகாந்த்,
கன்கார்டு, கலிஃபோர்னியா

© TamilOnline.com