நவம்பர் 2015: வாசகர் கடிதம்
நான் கோவையிலிருந்து பீனிக்ஸ் (அரிசோனா) வந்துள்ளேன். இங்கு 'தென்றல்' செப்டம்பர் இதழ் பார்த்தேன். பலவண்ண அட்டை, கோவை ஞானி பற்றிய கட்டுரை, காந்தி கண்ணதாசன் நேர்காணல், செய்திகள், கட்டுரைகள் அனைத்தும் சிறப்பு. மிக்க மகிழ்ச்சி.
கோவை வெ. சுப்பிரமணியன்,
ஃபீனிக்ஸ்

*****


உலகையே இன்று புரட்டிப்போட்டு ஆட்சி செய்துகொண்டிருக்கும் கணினி நிறுவனங்களின் பிதாமகர்களான ஆப்பிள் ஸ்டீவ் ஜாப்ஸூம், ஃபேஸ்புக் மார்க் ஸுக்கர்பர்கும், கர்மபூமியான பாரதத்திலுள்ள நைனிதாலில் நீம் கரோலி பாபா கட்டிய கோவிலுக்குச் சென்று வந்தபின்பு பெற்ற ஆத்மபலத்தினால், தங்களது துறையில் இன்னும் முனைப்புடன் செயல்பட்டுப் பல சாதனைகளைப் புரிந்தார்கள், என்பதை அறியும்போது நமது மண்ணின் மகத்துவத்தை உணர்ந்துகொள்ள முடிகிறது.
நா. நாச்சியப்பன்,
ஃபால்சம், கலிஃபோர்னியா© TamilOnline.com