ஜிந்தா


அநேகன் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து கார்த்திக் முக்கிய வேடத்தில் நடிக்கும் படம் ஜிந்தா. வைபவ் நாயகன், சுஷ்மா ராஜ் நாயகி. ஏ.ஆர். ரகுமானின் சகோதரி மகன் ஹசார் காசிப் இசை அமைப்பாளராக அறிமுகமாகிறார். இயக்குநர் வசந்திடம் இணை இயக்குனராகப் பணியாற்றிய எஸ்.கே. வெற்றிச்செல்வன் இப்படத்தில் இயக்குநராகிறார். "இந்தக் கதை முற்றிலும் ஒரு புதிய முயற்சி. படத்துக்கு உற்சாகமும், துள்ளலும்தான் மூலதனம். கதையை நான் எழுதும்போதே என் மனதில் வந்து அமர்ந்தவர்கள் கார்த்திக் சாரும், வைபவும்தான். அவ்வளவு பொருத்தமாக இருந்தது. 'ஜிந்தா' எல்லா ரசிகர்களையும் கவரும் ஜனரஞ்சகமான படமாக இருக்கும்" என்கிறார் வெற்றிச்செல்வன். பேரைச் சொன்னாலே சும்மா அதிருதில்ல!

அரவிந்த்

© TamilOnline.com