யாத்ரீகன்


10 முதல் 45 வயது வரையுள்ள ஒரு மனிதனின் வாழ்க்கைப் பயணத்தைச் சொல்ல வருகிறது யாத்ரீகன். கிஷோர் நாயகனாகவும், சாயா சிங் நாயகியாகவும் நடித்திருக்கின்றனர். கர்நாடக இசையில் தேர்ந்தவரும், இசைப்பள்ளி நடத்தி வருபவருமான ஜி. ரங்கராஜ் இசையமைத்துள்ளார். திரைப்படக் கல்லூரி மாணவர் ஜெயபால் கந்தசாமி, கதை திரைக்கதை படத்தை இயக்கியிருக்கிறார். சிலிகுரி, டார்ஜிலிங், காசி, நேபாளம், கேங்டாக் உள்ளிட்ட பல இடங்களில் படப்பிடிப்பு நடந்துள்ளது. "யாத்ரீகன் வெள்ளித்திரையில் ஒரு பயண அனுபவமாக இருக்கும். நாயகன், அவன் சந்திக்கும் மனிதர்கள், சம்பவங்கள் சுவாரஸ்யத் தோரணங்களாக ரசிக்க வைக்கும். பார்க்கும் ஒவ்வொருவரையும் கதையுடன் தொடர்புபடுத்தி மகிழவும், நெகிழவும் வைக்கும்." என்கிறார் இயக்குனர். ஆயிரக்கணக்கான புத்த பிட்சுகள் பங்கேற்கும் பிரமாண்ட ஊர்வலம் இப்படத்தின் ஹைலைட்களில் ஒன்றாம்.

அரவிந்த்

© TamilOnline.com