அதிரடி வேட்டை


பிரபல நடிகர் ஒருவர் திடீரென மர்மமான முறையில் கொலை செய்யப்படுகிறார். கொலை செய்தது யார், ஏன், என்ன காரணம் என்பவற்றைப் பல்வேறு சுவாரஸ்யமான திடுக்கிடும் சம்பவங்களுடன் சொல்கிறது அதிரடி வேட்டை. ஸ்ரீகுமார், ஆர்தன், தினேஷ் பணிக்கர் ஆகியோர் நாயகர்களாகவும், ஷில்பா, ரோஷினி நாயகிகளாகவும் நடிக்கின்றனர். சரவணன் இசையமைக்கும் இப்படத்தை அஸ்வின்குமார் எழுதி இயக்குகிறார். ஆக்‌ஷன் + த்ரில் + திகில் என்று இப்படம் ஒரு சுவையான கலவையாக இருக்கும்.

அரவிந்த்

© TamilOnline.com