வில் அம்பு


ஸ்ரீ மற்றும் ஹரிஷ் கல்யாண் நாயகர்களாகவும் சிருஷ்டி டாங்கே, சம்ஸ்கிரிதி ஷெனாய் நாயகிகளாகவும் நடிக்கும் படம் வில் அம்பு. நவீன் இசையமைக்கும் இப்படத்தை ரமேஷ் சுப்ரமணியம் இயக்கியுள்ளார். பாடல்களை ஜி.வி. பிரகாஷ் குமார், அனிருத், டி. இமான் பாடியுள்ளனர். "வாழ்க்கையில் நடக்கும் ஒவ்வொரு நிகழ்வின் பின்னணியிலும், இன்னொருவருக்கு நேரடியாகவோ மறைமுகமாகவோ தொடர்பு இருக்கிறது என்பதுதான் படத்தோட மெசேஜ்" என்கிறார் இயக்குநர். மதன்கார்க்கி எழுதியிருக்கும் 'குறும்படமே உயிர்க்கிறாய்' என்ற பாடல் நிச்சயம் பேசப்படும் என்கிறார் கோலிவுட் கோவிந்து. அதுசரி, வில் யார், அம்பு யார்?

அரவிந்த்

© TamilOnline.com